தன் கையே தனக்கு உதவி(மனம் மாறிய பணக்காரன்)

ஒர் ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த வேலைக் காரன் திடீரென வேலைலிருந்து நின்று விட்டான்.எனவே அவன் புதிய வேலைக்காரனை வேலைக்கு தேடினான் அதற்காக செய்திதாளிலும் செய்தி வெளியிட்டான்.ஒரு நாள் அவன் வீட்டு பெல் அடித்தது.அவன் கதவை திறந்ததும் ஒருவன் நின்றுக்கொண்டிருந்தான் அவனிடம் யார் நீ என அந்த பணக்காரன் கேட்டான்.அதற்கு அவனோ ஐயா என் பெயர் முத்து நான் உங்க வீட்டில் புதிதாக வேலைக்கு வந்துள்ளேன் என்றான். அந்த பணக்காரன் தேடியதுப்போலவே ஒரு வேலைக்காரன் அவனுக்கு கிடைத்து விட்டான்.
உள்ளே வாருங்கள் என உள்ளே அழைத்தான்.உள்ளே சென்ற வேலைக்காரன் ஐயா நான் வெகு தொலைவில் இருந்து வந்தளேன் எனக்கு காபி வேண்டும் இல்லையென்றால் என்னால் வேலை செய்ய இயலாது என்று கூறினான்.இதைக் கேட்ட பணக்காரனோ இவனை விட்டால் நமக்கு வேறு ஆள் கிடைக்காது என்று எண்ணி அவனுக்கு இதுவரை வேலையே செய்யாத அந்த பணக்காரன் முதல் முறையாக காபி போட்டு கொடுத்தான்.
காபி குடிக்கும் போது எனக்கு பேப்பர் படிக்கும் படிக்கும் பழக்கம் உள்ளது எனவே எனக்காக பேப்பர் கொண்டு வா என்று அந்த வேலைக்காரன் அந்த பணக்காரனுக்கு கட்டளையிட்டான்.அந்த பணக்காரன் இவனை நம் வேலைக்கு அழைத்தால் இவன் நம்மிடமே வேலை வாங்குகிறானே என்று முணுமணுத்துக் கொண்டே இருந்தார்.
பின்னர் அந்த பணக்கார் இவன் என்னதான் செய்கிறான் என்று பார்த்தால் பேப்பரை முகத்தின் மேலே போட்டுக் கொண்டு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை அந்த பணக்காரன் எழுப்பனான் உடனே அந்த வேலைக்காரன் டேய் அறிவுக் கெட்டவனே ஏண்டா எழுப்பின என்று கேட்டான்.கோபத்தோட அந்த பணக்காரன் ஏண்ட உன்ன நான் வேலைக்கு சேர்தா நீ என்னையே வேலை வாங்கீட்டு என்னையே எதிர்த்து பேசிறியா
எழுந்து வேலைய பாருடா என்றார்.
உடனே அந்த வேலைக்காரன் ஐயா பயணக்களைபில் மிகவும் பசிக்கிறது எனக்கு சிக்கன் 65 வேண்டும் என்றான்.கோபத்தன் உச்சிக்கே சென்ற பணக்காரன்  சிக்கன் 65 வேண்டுமா இந்தா வாங்கிக்கோ என்று பின்பக்கத்தில் உதைத்து வெளியே தள்ளினான்.அதன் பின் அந்த பணக்காரன் எனக்கு வேலைக்கு ஆட்களே தேவையில்லை தன் கையே தனக்குதவிடா என்றுச் சொல்லி கதவை மூடினான்.

Comments

Popular posts from this blog

Coreldraw ToolBox and its Functions

Get to know Photoshop (Photoshop basic part-1)

Work with layers (Photoshop basic part-3)